நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட வர்ணனையாளருமான டொனி கிரேக் தனது 66 ஆவது வயதில் இன்று காலமானார்!
இங்கிலாந்து அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டொனி கிரேக் 3599 ஓட்டங்களையும் 141 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார். 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ஓட்டங்களையும், 19 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஓய்வுபெற்ற பின்னர் தொலைக்காட்சி வர்ணனையாளராக மாறிய இவர் சமீபத்தில் முடிவடைந்த இருபது - 20 உலகக் கிண்ண போட்டி வரை வர்ணனையாளராக பணிபுரிந்துள்ளார்.
Tags
உலகச் செய்திகள்
