“மாட்டிறைச்சி சாப்பிடும்’ உங்களை மாடு வெட்டுவது போன்று நானும் வெட்டுவேன்’ -நாகொடை வைத்தியசாலை வைத்தியர்.


களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிபெற்ற முஸ்லிம் பெண் ஒருவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார் . குறித்த பெண் சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் அது தொடர்பாக அறிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது .

குறித்த முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள தகவல் வருமாறு :- நான் எல்.ஆர்.டி. சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டாலும் டாக்டரின் வற்புறுத்தலுக்கு இணங்க அதற்கான பத்திரத்தில் கையொப்பமிட்டேன். வைத்தியசாலையில் சுகப்பிரசவம் நடந்து இரு தினங்களின்பின் காலை 8 மணிமுதல் உணவு உண்ணுவதை தவிர்த்து இருக்கும்படியும் எல்.ஆர்.டி. சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் தாதியினால் தெரிவிக்கப்பட்டது. பின்பு அன்று மாலை சிகிச்சை வழங்கப்படாது என்று கூறப்பட்டது. இவ்வாறு இரு தினங்கள் தெரிவிக்கப்பட்டதால் உணவு உண்ணாமலிருந்த காரணத்தினால் குழந்தைக்கு பாலும் கொடுக்க முடியாமற்போனது.

எல்.ஆர்.டி.சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பாத சிங்கள தாய்மார்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டாலும் நான் மாத்திரம் அனுமதிக்கப்படவில்லை. எனது உறவினர்கள் கோரியும் குறிப்பிட்ட டாக்டரினால் அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே நான் டாக்டரின் அனுமதியின்றி வெளியேறி களுத்துறை பொலிஸில் சம்பவம் தொடர்பாக முறையிட்டேன். சம்பவத்துக்குப் பொறுப்பான டாக்டர் சிகிச்சைக்காக செல்லும் முஸ்லிம் நோயாளிகளை முறையற்ற விதத்தில் பேசுகிறார். “மாட்டிறைச்சி சாப்பிடும்’ உங்களுக்கு வேதனை ஏற்பட்டால் பரவாயில்லை. மாடு வெட்டுவது போன்று நானும் வெட்டுவேன்’ என்று தெரிவிக்கிறார். எனவே, எந்தவொரு நோயாளிக்கும் இந்நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : விடிவெள்ளி 

1 Comments

Previous Post Next Post