போயா தினத்தில் காணப்படும் பொது விடுமுறைகள், 2013 ஆம் ஆண்டு நாட்காட்டியில் நீக்கப்பட்டுள்ளதாக பொது பல இயக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு தமது சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் விதாரன்தேனியே நத்ததேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அடுத்த ஆண்டுகான நாட்காட்டியின் போயா தினத்தை பொது வர்த்தக விடுமுறையாக உடன் பிரகடனப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அடுத்த ஆண்டுக்கான நாட்காட்டி அச்சிடும் போது சில தவறுகள் நேர்ந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அதனை உடன் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரித்தார்.
