ஹலால் சான்றிதழ் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் அல்-கைதா, ஹமாஸ் போன்ற சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்படுவதாக பொதுபல சேனா இயக்கம் கூறியுள்ளது.
கனடாவில் ஹலால் சான்றிதழ் வழங்கும் முஸ்லிம் அமைப்பொன்று சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் அனுப்பியுள்ளது, இதன் மூலம் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களை விரிவுபடுத்துவது இவர்களில் நோக்கம் எனவும், இத்தகவலை கனடாவில் இயங்கும் "Point de Bascule" என்ற அமைப்பு வெளியிட்டுள்ளதாகவும் பொதுபல சேனா இயக்கம் இன்று கூறியுள்ளது.
