ஹலால் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு தமது அமைச்சு ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை என வணிக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிகையில்
நுகர்வோர் விவகார அமைச்சு என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக ஹலால் என்ற ஒரு சான்றிதழை வெளியிட எமது அமைச்சு அங்கீகாரம் வழங்கவில்லை.அது வேறாக அமைத்துக்கொள்ளப்பட்டதொன்று.இந்த சான்றிதழுக்கும் எமது அமைச்சுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை மட்டுமே என்னால் மேலதிகமாக உறுதிப்பட கூறமுடியும் என்றார்.
தகவல் : விடிவெள்ளி இணையம்
