இலங்கையில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
முஸ்லிம் மக்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள் மற்றும் ஹலால் முத்திரைகளுக்கு எதிராக அண்மைக் காலங்களாக பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் தாங்கள் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் பிரச்சனை தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
எம்பிலிபிட்டிய பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் முச்சக்கர வண்டியில் வந்த நபர்களால் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டிருப்பதாகவும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
