இரு கால்களும் செயலிழந்து தனது இளமைப் பருவத்தை வீட்டினுள் கழிக்கும் ஹெம்மாத்தகமையில் வசிக்கும் சகோதரன் M.Z.M. நபீல் அவர்களுக்கு கழிவறையுடன் கூடிய சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுத்தருவதற்கு உதவிசெய்யுமாறு கடந்த 16 ஆம் திகதி எமது இணையத்தளம் ஒரு ஆக்கத்தை வெளியிட்டது.
இந்த ஆக்கத்தின் பலனாக சகோதரன் M.Z.M. நபீலிற்கு கடந்த வியாழக்கிழமை 20 ஆம் திகதி எமது சகோதரர் ஒருவர் கழிவறையுடன் கூடிய சக்கர நாற்காலி ஒன்றை அன்பளிப்புச் செய்தார். அல்ஹம்துலில்லாஹ். அன்பளிப்புச் செய்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த சகோதரனுக்கு நோய் நொடிகள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழவும், மேலும் மேலும் இது போன்ற உதவிகளை வழங்க அவரது தொழிலில் நல்ல பரக்கத்தினை வழங்கவும் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம். இந்த செய்தியை வாசிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இவருக்காக துஆ செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.
அத்துடன் இந்த செய்தி தொடர்பாக உதவிகளை வழங்க தொடர்புகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும், மற்றும் இந்த செய்தியை வாசித்துவிட்டு மற்றவர்களுடனும் பகிர்ந்துகொண்டு இன் நற்செயலில் பங்குவகித்த அனைவருக்கும் திஹாரிய நியூஸ் இணையம் தனது நன்றிகளை தெரிவித்துகொள்வதுடன் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம்.
குறிப்பு:
இதை படித்துவிட்டு மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.