இன்று அதிகாலை 5:30 மணியளவில் திஹாரிய மல்வத்த நீதி மன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.
நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து வந்த வேன் (WP / PH-4345) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் வண்டி(NW / MJ-9155) ஒன்றில் மோதி பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த சகோதர இனத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவரின் மேல் மோதியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் எமக்கு தெரிவித்தார். மோட்டார் வண்டியில் பயணித்த நபர் வதுபிடுவல வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திஹாரிய அல்-அஸ்ஹர் பாடசாலைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்வதாகவும், தினமும் அதிகாலையில் நடந்தே வேலைக்கு செல்வதாகவும் பலியான பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Tags
திஹாரிய செய்திகள்



