இலங்கை பங்களதேஷ் அணிகளுக்கிடையில் இன்று மாத்தறையில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார விளையாட அனுமதிக்கப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் சபையுடனான இவ்வாண்டுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமையே இதற்குக் காரமென தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் 23 பேர் இவ்வருடத்திற்கான ஒப்பந்ததினை புதுப்பிக்க ஒப்புதல் கையொப்பம் இடவில்லை. இதற்கான இறுதி வாய்ப்பு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த வீரர்களுடன் நேற்று இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவவார்த்தை ஒன்றை நடத்தியது. இதில் சுமூகமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனவும் தகல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த முக்கியமான வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இருப்பதற்கு முக்கிய பிரச்சினையாக சம்பளம் மற்றும் போட்டிகளுக்கான ஊதியம் என்பனவை நிலுவையில் இருப்பதே காரணமென தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்வில்லையாயின், விரைவில் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பங்களதேஷ்-இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரில் அறிமுக வீரர்களைக் களமிறக்க இலங்கை கிரிக்கெட் சபை தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அணி வீரர்களை சந்திக்கிறார் சனத்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்குமிடையிலான கருத்து வேறுபாட்டினை சுமூகநிலைக்குக் கொண்டு வர இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய இன்று மாலை 6.30 மணிக்கு அணியின் முக்கிய வீரர்களை சந்திக்கவுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சம்பளம் மற்றும் போட்டிகளுக்கான ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகளால் இவ்வருடத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்து வரும் நிலையிலேயே மேற்படி சந்திப்பினை முன்னாள் இலங்கை அணித் தலைவரும் தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவருமான சனத் ஜயசூரிய சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பின் பின்னரே பங்களதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் முடிவுசெய்யப்படவுள்ளனர். இதற்கான இறுதிக்கட்ட முயற்சியாகவே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
