உலமா சபையின் ஆட்டத்தை எவ்வாறு அடக்குவது என்பது எமக்கு தெரியும் - பொது பல சேனா




அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நேற்று  ஊடகவியலாளர் சந்திப்பு  ஒன்றை ஏற்பாடு செய்து ஹலால் சான்றிதழை நிறுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்து. ஆனால் இதனை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.  என் என்றால் அது ஒரு பொய் நாடகம் என இன்று பொது பல சேனா அமைப்பின் தலைமையகமான சம்புத்தத்வ ஜெயந்தியில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

தொடர்ந்து அங்கு உரையாற்றி அவர்:
உலமா சபையின்  நேற்றைய முடிவின் படி உள்நாட்டில் மாத்திரம் ஹலால் இல்லை. எனினும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால்  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால்  நடைமுறைகளும் உள்ளடக்கப்படும். ஹலால் சான்றிதழ் என்பது ஹலால் விடயத்தில் உள்ள இறு திப்படிமுறையாகும். நாம் வேண்டிக்கொள்வது  ஹலால் சான்றிதழை  மட்டுமல்ல, ஷரீய சட்டப்படி இயங்கும் சகல ஹலால் படிமுறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டும் .

ஜனாதிபதியால் நியமித்த அமைச்சரவை உப குழு தனது முடிவினை அறிவிக்க முன்னர் ஜம்இய்யதுல் உலமா சபை ஏன் இந்த முடிவுக்கு  வரவேண்டும்? இன்று இந்த நாட்டில் பெளத்த மதத்துக்கு எதிராக சிலர் செயற்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சில தேரர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள். 

இந்த நாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஹலால் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதுபற்றி தெளிவுபடுத்தியது பொது பல சேனா அமைப்புதான். ஆனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் உலமா சபை சில பிக்குகளை அழைத்துச்சென்று  முன்னிலைபடுத்தி தமது முடிவுகளை வெளியிட்டது. அந்த பிக்குகள்  சொல்கிறார்கள் 'எடுத்திருக்கும் முடிவு நாட்டுக்கு கிடைத்த வெற்றியென்று'. ஹலாலுக்கு எதிராக அவர்கள் என்ன செய்தார்கள்?அந்த தேரர்களை கொண்டு முன்னிலைப்படுத்துவதற்கு உலமா சபைக்கு எவ்வாறு அதிகாரம் வந்தது. உலமா சபை மேலும் ஆடினால் அதனுடைய ஆட்டத்தை எவ்வாறு அடக்குவது என்பது பற்றி எமக்கு நன்கு  தெரியும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post