"ஹலால் புத்தாண்டுஅல்ல இது, சிங்களப் புத்தாண்டு" கண்டியில் சுவரொட்டிகள்.

இன்று கண்டி நகரில் சில இடங்களில்  "ஹலால் புத்தாண்டுஅல்ல இது, சிங்களப் புத்தாண்டு" மற்றும் "ஹலாலை சமயலறைக்கும் புத்தாண்டு உணவு மேசைக்கும் எடுத்துக்  கொள்ளவேண்டாம்’, ‘சிங்கள வர்த்தகர்களே நுகர்வோரை மதிக்கவும். உங்கள் ஊழியர்களுக்கு உபதேசம் செய்யவும்’, ‘இம்முறை புத்தாண்டை எமதாக்கிக் கொள்வோம். சிங்களவர் கடைகளுக்கு மட்டும் அடியெடுத்துவைப்போம்’. போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு "சிங்கள குரல்" என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளது.

இதேவேளை பொது பல சேன  அமைப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் பாரிய கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடுகளை செய்வது வருகிறது . அது தொடர்பான சுவரொட்டிகள் கண்டி, மாத்தளை பிரதேசங்களில் பரவலாக ஒட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post