பொதுபல சேனா மற்றும் மகாநாயக்க தேரர்களுடன் ஜம்மியத்துல் உலமா நேரடி கலந்துரையாடல் ?


பூதாகாரமாக மாறியுள்ள ஹலால் விவகாரம் குறித்து இணக்கப்பாடொன்றினை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை ஒன்றை  அரச, எதிர்கட்சி பிரமுகர்கள் முன்னெடுத்து  வருவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இரண்டு சமூகங்களுக்குமிடையே மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் குறித்த பேச்சுவார்த்தை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களின் உதவியுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய பிரமுகர்கள் இன்னும் ஓரிரு தினங்களில்  மகாநாயக்க தேரர்களையும், பொதுபல சேனாவின் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post