அணு ஆயுதங்கள் விஷயத்தில் ஈரானை தடுக்கும் சக்தி அமெரிக்காவுக்கு உள்ளது :ஒபாமா


ஈரான் வசம் அணு ஆயுதங்கள் செல்வதை தடுக்கும் சக்தி அமெரிக்காவுக்கு உள்ளது என்று அதிபர் ஒபாமா கூறினார். அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக கூறி, அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு அடுத்த வாரம் அமெரிக்க ஜானதிபதி  ஒபாமா செல்கிறார். இதை முன்னிட்டு இஸ்ரேல் Ôசேனல் 2Õ டிவிக்கு ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முயற்சித்து வருகிறது.  இந்த திட்டம் முழுமை அடைய ஓராண்டோ அல்லது அதற்கு மேலோ ஆகலாம். இந்த பிரச்னை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். ஈரானிடம் அணு ஆயுதங்கள் செல்வதை தடுக்கும் சக்தி அமெரிக்காவுக்கு உள்ளது. தூதரக ரீதியாக ஈரான் பிரச்னைக்கு தீர்வு காண முடிந்தால் நல்லது. இல்லாவிட்டால் வேறு வழிகளில் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்  ஒபாமா . இதனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post