நாட்டின் தேசிய பிரச்சினையில் பிக்குகள் சமூகம் முன்னோக்கி வந்தாலும் கலகம் விளைவிக்கக் கூடாதென பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுசன விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.பிக்குகள் கலாசாரத்திற்கும் புத்த தர்மத்திற்கும் ஏற்றவாறு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மடம்பெல்ல ஸ்ரீவர்தனாராம விகாரையில் இன்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.பிக்குகள் கதைக்கும் போது சமயகுரு அல்லாதவர்கள் போன்று கதைக்கக் கூடாதெனவும் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிக்குகள் சமூகம் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு முன்னிலை வகிக்கும்போது மல்வத்து-அஸ்கரிய மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை, வழிகாட்டலின்கீழ் ஒன்றாக செயற்பட வேண்டும் எனவும் அவ்வாறின்றி வேறாகச் செயற்பட்டு சில அமைப்பாக வேலை செய்தால் அது தர்மத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் செயல் என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இலங்கைக்கு வந்தபோது ஹலால் பிரச்சினை இருக்கவில்லை எனவும் பல காலம் முஸ்லிம் – சிங்களவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வந்ததாகவும் மீண்டும் இனபேதம், மதபேதம் ஏற்படுத்தப்படக் கூடாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் மதபேதத்தை ஏற்படுத்தும் வகையில் எவரும் செயற்பட்டால் சமாதானத்தை, அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு இன்றைய நாளில் தான் எச்சரிக்கை விடுப்பதாகவும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
.jpg)