சந்திர கிரகணம் இன்று 15ம் திகதி நடைபெறுகிறது. இன்று 15ம் திகதி இரவு 11.53 மணிக்கு துவங்கி மறுநாள்(16ம் திகதி) அதிகாலை 3.32 மணிக்கு முடிகிறது.
இந்த முழு சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்கலாம். ஆனால் நிறம் சற்று குறைவாகக் காணப்படும்.
இந்தியா மட்டுமின்றி இரவு இருக்கும் நாடுகளிலும் இந்த சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
சந்திர கிரகணம் பவுர்ணமி நாட்களில் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் கடந்த 3ம் திகதி சூரிய கிரகணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கிரகணத் தொழுகை
ஸலாத்துல் குஸுஃப் ( கிரகணத் தொழுகைகள்): 2 ரக்அத்கள்.
சூரிய கிரகணம் ஏற்படும்போதும், சந்திர கிரகணம் ஏற்படும் போதும் நபி(ஸல்) சிறப்புத் தொழுகை தொழுதுள்ளனர். பெருநாள் தொழுகையைப் போன்று முதலில் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பாவும் நடைபெறும். ஒவ்வொரு ரகஅத்திலும் இரண்டு ருகூவுகள் செய்யவேண்டும். முதலாவது ருகூவு அதிக நேரம் செய்ய வேண்டும். பிறகு எழுந்து அதிகமாக ஓதவேண்டும்;. பிறகு ருகூவு செய்ய வேண்டும். இது முந்தைய ருகூவுவைவிட சற்று குறைவாக இருக்க வேண்டும். பிறகு நீண்ட இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இவ்வாறே அடுத்த ரகஅத்தையும் நிறை வேற்றவேண்டும். இமாம் கிராஅத்தை சப்தமாக ஓதவேண்டும். கிரகணம் துவங்கியது முதல் முடியும் வரை தான் இத்தொழுகையின் நேரமாகும். பெண்களும் இத்தொழுகையில் பங்கு பெறலாம்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூற்கள்; புகாரி, முஸ்லிம், அஹ்மது.)
சூரியனும் சந்திரனும் இறைவனது வல்லமையை பறைசாற்றும் இரண்டு அத்தாட்சிகளாகும். எவரது மரணத்திற்காகவும், வாழ்வுக்காகவும் கிரகணம்; ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காண நேர்ந்தால் அல்லஹ்வை பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள்! தொழுங்கள்! தர்மம் செய்யுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)