தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று திஹாரியில் ஆரம்பம் (புகைப்படங்கள் இணைப்பு)

சுகாதார அமைச்சு மற்றும் டெங்கு ஒழிப்புத் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 26 ஆம் திகதிவரையான இந்த தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தின் செயற்பாடுகள் நேற்று நுகேகொடயில் சுகாதார அமைச்சர் மைத்திரிபா சிறிசேன தலைமையில் நடைபெற்றன.
 
தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு முப்படையினர் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஒத்துழைப்பு வழங்குவர். மக்கள் சுகாதார பரிசோதகர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் இந்த டெங்கு நுளம்பு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியானது மக்களிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது. சுகாதார அமைச்சினால் மட்டும் இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. அதனால்தான் 11 அமைச்சுக்களை இணைத்து ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த வேலைத்திட்டத்தின்  ஒரு அங்கமாக இன்று திஹாரிய பிரதேசத்திலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்க்கப்பட்டது. நிட்டம்புவா பொலிஸார் மற்றும் மக்கள் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் இந்த டெங்கு நுளம்பு ஒழிப்புத் திட்டம் இடம்பெற்றது. 

இவ் வேலைத்திட்டத்தின் பொது எமது மராவிட்க்கு பதிவான சில புகைப்படங்கள் உங்களுக்காக .....



புகைப்படங்கள்: எ.எ.எ அப்ராஸ் - ஊர்மனை செய்தியாளர் 









Post a Comment

Previous Post Next Post