சென்றல் பிளேஸ் இல் நடந்த வாகன விபத்தில் தந்தையும் மகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று 02-07-2011 மாலை 5.30  மணியளவில் திஹாரிய சென்றல் பிளேஸ் தபால் கந்தோருக்கு முன்னால்  இடம் பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனது மகளின் பகுதிநேர வகுப்பு முடிவுற்று மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த சமயத்தில் எதிர்பாரத விதத்தில் வேகமாக வந்த கெப் வண்டி ஒன்று  மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரும்  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் பல் ஒன்றையும் விபத்து நடந்த  இடத்தில் எம்மால் அவதானிக்கமுடிந்தது. மோதுண்ட கெப் வண்டியில்  காயமடைந்த  இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதால் கெப் வண்டியின் புகைப்படங்களை எங்களால் எடுக்க முடியாமல் போனது. 
 
விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் சகோதர மொழி பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post