இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் உத்தியோக பூர்வ இணையத்தளம் www.drshukri.net நேற்று 06-07-2011 இலங்கை தபால் தலைமையகத்தின் கேட்போர்கூட அரங்கில் வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.இங்கிலாந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார் இவர் இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார். இவர் இதுவரை பல்வேறு இஸ்லாமிய நூல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஹலீம் ஹலீம் மசூர், அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் , ஜாமிஆ நளீமிய்யாவின் உயர் அதிகாரிகள், இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். மீள்வார்வை ஊடக நிறுவனம் இன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

