பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக சகோதரர் அஸீம் சுபைர் தெரிவு.


அல்- அஸ்ஹர் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டம் இன்று (29-01-2012 ) இரவு 8 மணியாளவில்  அல்- அஸ்ஹர் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் போது 2012 ஆம் ஆண்டுக்கான புதிய  பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர், செயலாளர்  மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.


பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக அதிபர் அவர்களும், உபதலைவராக அல்-ஹாஜ் M.H.M கமர் அவர்களும், செயலாளராக அஸீம் சுபைர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சங்கத்தின் உறுப்பினர்காளாக சகோதரர்களான இர்ஷாத், இர்ஷான், ருக்க்ஷான், உமர், இனாம், அஸ்கர், மபாஸ், ரிஸ்வான், ரிப்னாஸ்,  ஸப்ரான், அப்ராஸ், சைபுல்லா ஆகியோர் தெரிவு  செய்யப்பட்டார்கள்.

பழைய மாணவர் சங்கத்தின் கூட்டங்களின் போது அதிகமான பழைய மாணவர்கள்  கலந்துகொண்ட கூட்டமாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

1 Comments

  1. Wish you all the best for new team, I hope this team will work for a bright future of Al-Azhar.

    ReplyDelete
Previous Post Next Post