அங்கவீனர் நிலையத்தின் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு திஹாரிய தூல்மலையில் அமைந்துள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று (12 -02 -2012 ) காலை அங்கவீனர் நிலையத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.


அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற  இன் நிகழ்வில் திஹாரியை சூழவுள்ள தமிழ், சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் கல்விகற்கும் வறிய மாணவ மாணவிகளின் கண்களைப்  பரிசோதித்து கண்பார்வையில் குறையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக  மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக அங்கவீனர் நிலையத்தில் கல்விகற்ற பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அங்கவீனர் நிலையத்தின் மாணவர்களின் கலை நிகழ்சிகளுடன் இன் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 










Post a Comment

Previous Post Next Post