ரம்பாவெலயில் விபத்து, சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் காலமானார். (UPDATE)

இன்று காலை ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகத்துறை பணிப்பாளராகவும், முஸ்லிம் சேவை பணிப்பாளராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் காலமாகியதோடு மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை - ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், ஸ்தலத்திலேயே சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் மரணமடைந்துள்ளார்.


திரு., திருமதி யோகராஜன், ஜாபீர், சந்திரகாந்தன், ஜெகன்மோகன் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் விளம்பர பிரிவைச் சேர்ந்த சந்தன ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






புகைப்படங்கள் மற்றும் உசாத்துணை : 
தமிழ்மிரர் இணையத்தளம்

2 Comments

  1. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்
    Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்

    Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon

    We belong to Allah and to Him we return.

    ReplyDelete
Previous Post Next Post