ஓகொடபொலயில் இன்று மாலை 4:30 மணி முதல் தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கும் மேலாக பெருமழையுடன் கூடிய கடும் காற்று வீசியதனால் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.
அதேநேரம் பிரதேசத்தில் அதிகமான மரங்கள் முறிந்தும், வேறுடன் பிடுங்கப்பட்டும் விழுந்துள்ளன. இதனால் பிரதேசத்தில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஓகொடபொல கஹடோவிட பாதையில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:ராஜாஸ்



