வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களை இருள் சூழ்ந்துள்ளதுடன் தொடரான மழை பெய்து வருகின்றது, இலங்கையை சூழவுள்ள கடல் பிரதேங்கள் கொந்தளிப்பாக காணப்படுகின்றது என்று அறிவிக்கபடுகிறது .
இந்த நிலையில், இன்று இரவு வடக்கு கிழக்கு கடற்பகுதியில் மணித்தியாலயத்திற்கு 70 தொடக்கம் 80 மிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கரையோரப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சூறாவளி நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்கும் படி அனர்த்த முகாமைத்து நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு அவ் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
