அநுராதபுரம் மல்வத்து ஓயாவிலுள்ள தக்கியா அஹ்திய்யா பாடசாலை கடந்த சனிக்கிழமை சர்வதேச சக்திகளோடு இயங்குகின்ற தீய சக்திகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் புனரமைத்துத் தருவதாகத் தன்னிடம் கூறியதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். முதலமைச்சர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.
இதற்கு மக்காவிலுள்ள அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியும், மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் கண்டனங்களை வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுடன் இணைந்து இது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றிருப்பதாகவும் அஸ்வர் மேலும் தெரிவித்தார்.
இது அரசுக்கு விரோதமான சில தீய சக்திகளின் செயல் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மேலும் கூறினார்.
