இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் (Satellite) விண்ணில் செலுத்தத் தயார்!


சீனாவும் இலங்கையும் இணைந்து தயாரித்துள்ள செயற்கை கோள் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி இலங்கை நேரப்படி இரவு 9:30 இற்கு சீனாவின் பெய்ஜிங் இல் இருந்து விண்ணிற்கு அனுப்பப்படவுள்ளது.  சீனாவில் இருந்து அனுப்பப்படும் இந்த செயற்கை கோள் சுமார் 7 நிமிடங்களில் இலங்கை மீது நிலைகொள்ளும் என சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

முதல் முறையாக இலங்கை தேசிய கொடியுடன் விண்ணில் செல்லும் இந்த செயற்கைக்கோலை இலங்கையின் சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம்  தயாரித்துள்ளது.


இதனை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.மணிவானன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post