இன நல்லுறவிற்கான பாலம் : ஒரு முன்மாதிரிப் பணி .
கடந்த சில வாரங்களாக நாடு பூராகவும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அனர்த்தங்களினாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை அமைப்பு ஊர் மக்களுடன் இணைந்து குறிப்பிடத்தக்க அளவு பல நிவாரண வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 23-12-2012 மாரவிலை சிலாபம் மற்றும் மாதம்பை ஆகிய பிரதேசங்களில் பெரும் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு மாதம்பை சிலாபம் ஜமாஅத் மன்றமும் அவ் ஊர் மக்களும் மற்றும் சிலாபம் மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாணவர்களும் இணைந்து அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மதம் பாராமல் நிவாரண மற்றும் ஏனைய உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் போது வெள்ளத்தினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்ட மாரவில என்ற சிங்கள கிராமத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையினை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாணவர்களும் சிலாபம் - மாதம்பை ஜமாஅத் மன்ற ஊழியர்களும் சுத்தம் செய்வதனை காணலாம்.
படம் மற்றும் தகவல் : முஸ்தாக் மாதம்பை