முஸ்லிம்களைக் குறிவைத்து அண்மைக் காலமாக சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத மற்றும் மதவாத பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி இன்று நண்பகல் புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் நடைபெற்ற இப் பிரச்சார நடவடிக்கையில் நாட்டில் மீண்டும் இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் எனக் கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.



