குப்பைகளுக்கும் வரி அறவிடத் தீர்மானம்

திடக்கழிவு அகற்றும் நடவடிக்கை எதிர்காலத்தில் பாரிய சுமையாக வருமெனவும் இதனால் நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து 'குப்பைக்கான வரி' அறவிடும் நடவடிக்கை வெகு தொலைவில் இல்லையெனவும் சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்ட 800 மெற்றிக் தொன் குப்பைகளை அகற்றுவது கொழும்பு மாநகரசபைக்கு இலகுவான விடயமல்ல. கடுவலை நகரசபை  ஒரு நாளைக்கு 80 மெற்றிக் தொன் திடக்கழிவை சேகரிக்கின்றது. ஏனைய பெரிய நகரங்களும் பாரிய திடக்கழிவுகளை சேகரிக்கின்றன. இவற்றை அகற்றுவது ஒரு தலைவலியாகவுள்ளதெனவும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post