அல்-அஸ்ஹரின் நான்கு மாடி கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா - படங்கள்.


திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் புதிய நான்கு மாடி பிரதான மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

அல்-அஸ்ஹர் அதிபர் ஜனாப் M.T .M தொவ்சீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் "சுபசன் நிம்தர" பாடசாலை கல்வி வேலைத்திட்டத்தின் ஆரம்பகர்த்தாவும், மேல் மாகாண  சபை முதலமைச்சருமான பிரசன்ன  ரணதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

சுமார் 4 1/2 கோடி ரூபாய்கள் செலவில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடத்தின் 
முழுமையான வேலைகள் இன்னும்  மூன்று வருடகாலத்தினுள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக முதல் மாடி கட்டடத்தின் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதி உட்பட அதிபர் மற்றும் விஷேட அதிதிகளின் உரை அடங்கிய முழுமையான  வீடியோ தொகுப்பை திஹாரிய நியூஸ் இணையத்தில் எதிர்பாருங்கள்.





















இந்நிகழ்வில் "தேசிய மட்ட இஸ்லாமிய தினப் போட்டி - 2012" இல் அகில இலங்கை ரீதியாக பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவன்  R. ரஷாட் அஹமட் இற்கு பிரதம அதிதி மேல் மாகாண  சபை முதலமைச்சருமான பிரசன்ன  ரணதுங்க அவர்களால் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முதலமைச்சர் பிரசன்ன  ரணதுங்க அவர்களுக்கு TEDS சங்கத்தால் அதன் தலைவர் சகோதரர் நாஸிக் அவர்களால் TEDS இலட்சினை பொறிக்கப்பட்ட T -Shirt  ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

TEDS சங்கத்தின் உறுப்பினர்கள் குழு 


Post a Comment

Previous Post Next Post