சில இனவாத இயக்கங்கள் தமது அமைப்பின் பெயரை இனவாதசெயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றன. இதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம் மஹரகமவில் அமைந்துள்ள நோலிமிட் நிறுவனத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. இந்த ஆர்ப்பட்டத்திற்கும் பொதுபலசேனா அமைப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
இதன்மூலம் தமது அமைப்பின் பெயரை அவர்கள் நாசப்படுத்துகின்றனர். இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவதில்லை. இனவாதத்தை ஒழித்து தமிழ் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழும் சூழலொன்றை உருவாக்கவே நாம் பாடுபடுகிறோம் . எனவே முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான குறித்த நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமது அமைப்பின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அதற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
