இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு 1300 வருட காலம் கொண்ட ஒரு நீண்ட வரலாறு உள்ளதாகக் கூறுகிறார்கள். அது சுத்தப் பொய். என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் TNL தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்
அவர் உரையாற்றும்போது 1996 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் போது வரலாற்றை திரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு போன்ற முஸ்லிம்களின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றும் புத்தகங்கள் வெளியாகின.என்று கூறியுள்ளார் .
மேலும் அவர் இது ஒரு பெரும்பான்மை பெளத்த நாடு. ரப்பர் தோட்டத்தில் பிரதானமானது இறப்பர். எனினும் அங்கு மரக்கறி, கீரை வகைகளும் இடை நிலை பயிராக பயிரிடப்படும். அவ்வாறுதான் இங்குள்ள சிறுபான்மையினர் அதனை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று பிரதான பிரச்சினை ஹலால். எனினும் அது தொடர்பில் கதைப்பதற்கு ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் எவரும் இங்கு வராமை ஏமாற்றமளிக்கிறது. சந்தேகமொன்று ஏற்படின் அதனை பேசித் தீர்க்க வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபையூடாகவே நாட்டில் அடிப்படை வாதம் வளர்க்கப்படுகிறது. நாட்டில் முஸ்லிம்களால் பிரிவினைவாதம் தூண்டப்படுகிறது.
