சலவை இயந்திரத்தில் சிக்கிய 3 வயது குழந்தை தீயணைப்பு படையினரால் மீட்பு-Video


சீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார், உறவினரின் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிய போதுஅதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அவரது குழந்தை சலவை இயந்திரத்தினுள் சிக்கியிருந்துள்ளது. 

பின்னர் சலவை இயந்திரத்திலிருந்து குழந்தையை மீட்க தாய் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. தொடர்ந்து தீயணைப்பு படையினரின் உதவியை நாடியுள்ளார் அவர்.

விரைந்து வந்த தீயணைப்புப் படையினரின் பல மணி நேரப் பேராட்டத்தின் பின்னர் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post