உலமா சபையை தடை செய்ய வேண்டும் - பொதுபலசேனா



ஒரு மாத காலத்துக்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பொதுபலசேனா கூறியுள்ளது.

கொழும்பு மகரகமவில் இன்று நடந்த அந்த அமைப்பின் பொதுக் கூட்டம் ஒன்றின் போதே அந்த அமைப்பு இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்று கூறிய அந்த அமைப்பின் செயலாளர் , உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அங்கு பேசிய பௌத்த பிக்கு ஒருவர் உரையாற்றியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post