பொதுபல சேனாவின் வேண்டுகோளை நிறைவேற்ற ஜனாதிபதி உடனடி நடவடிக்கை!


குழந்தை பேற்றைத் தவிர்ப்பதற்காக பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் LRP எனும் அறுவை சிகிச்சை முறையை உடனடியாக அமுலாகும் வண்ணம் தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானதேரர் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்களப் பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுவருவதாகவும் இந்நிலை தொடரும் பட்சத்தில் நாட்டில் சிங்கள குடிசனத்தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த வயதெல்லை 26ஆக இருந்ததெனவும் அது தற்போது 39 வயது என மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

நன்றி : துருவம் 

Post a Comment

Previous Post Next Post