“ஹிஜாப் அணியக் கூடாது” மருதமுனை ஆசிரியைகளுக்கு கட்டளை.

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் தேசிய இனங்கள் அனைத்தும் தங்கள் மத அடையாளங்களை பேணுவதற்கு கல்வி அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அங்கீகாரம் இவ்வாறிருக்க இன்று கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் ஸ்டீபன் மெத்தீவ் மருதமுனை சேர்ந்த பெண் ஆசிரியைகளுக்கு இஸ்லாமிய உடையினை (அபாயா, ஸ்கார்ப் ) அணிந்து பாடசாலை வர தடை விதித்துள்ளார் என சம்மந்தப்பட்ட ஆசிரியைகளினால் கல்முனை கல்வி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது 

இவ்விவகாரம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சமூக நல் பிரஜைகளை உருவாகும் பாடசாலை ஒன்று இவ்வாறு கீழ்த்தனமாக நடந்துள்ளது கண்டிக்கத்தக்கதும் வேதனைகுரியதுமான விடயமாகும்..

இவ்விடயம் தொடர்பாக சமூக அக்கறை உள்ள அனைத்து தரப்பும் முன்வந்து கல்முனை கல்வி பணிமனை மூலம் உடன் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் எனவும். அரசியல் வாதிகள் இவ்விடயங்களிலாவது அக்கறை செலுத்த வேண்டும் .
நன்றி : மருதமுனை ஒன்லைன் 

1 Comments

  1. அரசுடன் கைகளை கோர்த்துக் கொண்டுள்ள கிழக்கு மாகான அரசியல்வதாதிகளே தயவு செய்து இது விடயத்தில் தலையிட்டு எமது பெண்களின் உரிமைகளை பெற்றுத் தாருங்கள்

    ReplyDelete
Previous Post Next Post