ஹலால் சான்றிதழ் வழங்குவதால் எவ்விதமான இலாபமும் இல்லை : ஜம்இய்யதுல் உலமா



(VI) ஹலால் சான்றிதழ் வழங்குவதால் எவ்விதமான இலாபமும் தமக்கு இல்லையென ஜம் இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜம்  இய்யதுல் உலமா சபையின் ஹலால் பிரிவின் தலைவர் மெளலவி முர்ஷித் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்:
சுமார் 60 நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்குவதை தனியார் நிறுவனங்கள் ஒரு சேவையாக செய்கின்றன.  அந்த பணியே எம்மால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது.இது சேவை நோக்கம் கருதியது மட்டுமேயாகும். ஹலால் சான்றிதழ் வழங்குவதால் எவ்விதமான இலாபமும் எமக்கு இல்லை. அதற்காக அறவிடப்படும் கட்டணம் எமது நிர்வாக செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது.

மாதார்ந்தம் ஹலால் சான்றிதழ் மூலமாக 15 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கிறது. அதில் 13 இலட்சம் ரூபா  நிர்வாகச் செலவுகளுக்கு செலவாகிறது.இதற்குரிய அனைத்து கணக்குகள் அடங்கிய ஆவணங்களும் அரசாங்கத்தின் உயர்மட்டங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு  ஹலால் சான்றிதழ் மூலம் நிதி சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. அது மிகத்தவறானதாகும்.  எமது நிதி அறிக்கைகளை பரீட்சித்து நாம் பயங்கரவாதிகளுக்கு துணைபோகிறோமா என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும்.

ஹலால் சான்றிதழ் வழங்குவது குறித்து அரசாங்கத்துடனோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினருடனோ பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் எந்நேரமும் தயாராகவே உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

Previous Post Next Post