விஸ்வரூபம் தற்காலிக தடை நீக்கம் - இலங்கையில் திரையிட அனுமதி


கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபதில் முஸ்லிம் மக்களை வேதனைக்குட்படுத்தும் வகையில் காட்சிகள் அமையப்பெற்றுள்ளதாக கூறி அந்த திரைப்படத்தை தடை செய்யுமாறு பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன. 

இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

எனினும் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னர் படத்தை வெளியிடுவதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post