ஹலால் உணவில் பன்றி இறைச்சிக் கலப்பு


சிறைச்சாலையில் ஹலால் உணவு என விநியோகிக்கப்பட்ட உணவுப் பண்டமொன்றில் பன்றி இறைச்சி கலந்திருப்பது அறியப்பட்டதனை அடுத்து சிறைச்சாலைக்கு உணவு விநியோகம் செய்த நிறுவனத்தை உடனடியாக இடை நிறுத்தப்போவதாக இங்கிலாந்தின் நீதியமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.

சிறைச்சாலை அமைந்துள்ள பிரதேச கவுன்சில் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகவர் நிறுவனம் அறிவித்துள்ள அதே வேளை குறிப்பிட்ட உணவுப்பண்டங்களை உடனடியாக மீளப்பெற்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனமும் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் நீதியமைச்சர் ஜெரமி ரைட், இது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், சிறைச்சாலை நிர்வாகம் உடனடியாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று கண்டுபிடிக்கப்பட்டவுடன் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் குறித்த தகவல் தெரியப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்ட உணவுப் பண்டங்கள் உடனடியாக மீளப்பெறப்பட்டதாகவும் நீதியமைச்சும் நிறுவனமும் உறுதி செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கிலாந்திலும் ஹலால் சான்றிதழ்களை இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் வழங்குவதும், சிறைச்சாலையாயினும் ஹலால் உணவுகளின் தரம் பேணப்படுவதும், சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உடனடியாக நீதியமைச்சரே நேரடியாக ஈடுபட்டு பொது மக்களின் நலனுக்கு உத்தரவாதமளிப்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

Post a Comment

Previous Post Next Post