ஒரு மாத காலத்திற்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. எனினும், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு குறைந்தளவு ஆதரவு கிடைத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும், 80000 வாக்குகள் கிடைத்த அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வினை வழங்காவிட்டால், பதவி விலகப் போவதாக ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
