கிளிம்பொல பிரதேசத்தில் முஸ்லிம் கடைகளுக்கு தாக்குதல்.
byTHIHARIYA NEWS 1st-
0
இன்று அதிகாலை நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகஸ்கொட்டுவ, கிளிம்பொல பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடையொன்றும் மூன்று ஹோட்டல்களும் இனம் தெரியாதோரினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு கடைகளிலிருந்து எந்தவிதமான திருட்டுச் சம்வங்களும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக உரிமையாளர்கள் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.