காதலியைக் கொன்று நாய்க்கு வீசிய உதைபந்தாட்ட வீரருக்கு 22 ஆண்டு சிறை!


காதலியைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட பிரேசில் பிளமிங்கோ அணியின் உதைபந்தாட்ட வீரர் புருனோ பெர்னாண்டஸ் டிசோசாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பிரேசில் நாட்டு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் பிளமிங்கோ உதைபந்தாட்ட அணியின் வீரரான டிசோசாவுக்கு காதலி  எலிசா சமுடியோவுடன் ஏற்பட்ட நட்பால் எலிசா கர்ப்பமடைந்தார். கர்ப்பத்தைக் கலைக்க டிசோசா வற்புறுத்திய நிலையில் மறுத்த எலிசா குழந்தையைப் பெற்றெடுத்து அதற்கு உரிமையும் கோரியது டிசோசாவை ஆத்திரமூட்டியது.

இதன் காரணமாக தமது நண்பரும் காவல்துறை அதிகாரியுமான மார்கோஸ் சாண்டோஸ் இடம் சொல்லி காதலி எலிசாவை கடத்தியுள்ளார். எலிசாவைக் கடத்திய சாண்டோஸ் அவரை அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். பின்னர் இருவரும் எலிசாவை கொலை செய்து உடலை பல பாகங்களாக வெட்டி நாய்களுக்கு உணவாகக் கொடுத்து விட்டு மீதியை வீட்டிலேயே சுவரில் வைத்து பூசியுள்ளனர்.


இந்த கொலை தொடர்பாக டிசோசா அவரது மனைவி உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இது வரை தமது குற்றத்தை மறுத்து வந்த டிசோசா காதலி எலிசாவைக் கொலை செய்து நாய்க்கு வீசியதை நேற்று ஒப்புக்  கொண்டதை அடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post