பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவன் நான்: மேர்வின் சில்வா


அடுத்த பிரதமர் பதவிக்கு நானே தகுதியானவன் என்று மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அடுத்த பிரதமராக நியமிக்க கூடிய வகையில் தகுதியான நபரொருவர் இல்லை. எனது அரசியல் வாழ்க்கையின் விளைவாக சகோதரன் சகோதரிகள் மற்றும் மைத்துனர்கள் பல கொல்லப்பட்டனர். 

நான் சிறைச்சாலையில் இருந்த போது எனது வீடு உடைக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல் செய்தேன். எனவே அவர் என்னை கட்டாயம் நம்ப வேண்டும் என்பதோடு அப்பதவியை பெற்றுகொடுக்க வேண்டும் என்றார்

Post a Comment

Previous Post Next Post