அரபு சந்தையில் பொருட்களை விநியோகிப்பதாயின் ஹலால் சான்றிதழ் கட்டாயம்.


இலங்கையைச் சேர்ந்த உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் 33 கம்பனிகள் டுபாய் இடம்பெற்ற கல்ப் பூட் -2013 வர்த்தகக் கண்காட்சியில் பங்குபற்றின. இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, ஏலம், கராம்பு , மிளகு, தேங்காய் எண்ணை,மரக்கறி, பழவகை, பிஸ்கட், குளிர்பானம் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

பெப்ரவரி 25 முதல் 28 வரை இடம்பெற்ற இந்த மாபெரும்  வணிகக் கண்காட்சியை டுபாயிலுள்ள இலங்கை தூதுவராலயம், இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தது.

இலங்கையில் இருந்து டுபாய்  வந்த ஏற்றுமதியாளர்களை வரவேற்கு முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசண விருந்து வைபவத்தில் டுபாயில்  உள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் எம்.எம்.அப்துல் றஹீம் பிரதான உரையை நிகழ்த்தி அரபு நாடுகளில் இலங்கை பொருட்களுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புக்கள்  எடுத்துரைத்ததுடன் பதனிடப்பட்ட உணவுப்பொருட்களை அரபு சந்தைகளில் விநியோகிப்பதாயின் ஹலால் (HALAL) அத்தாட்சிப் பத்திரத்தின் அவசியத்தினையும் விளக்கினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மட்டும் கடந்த ஆண்டு 2012 இல் 7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு நுகர்வு செய்யப்பட்டதுடன் மறு ஏற்றுமதியும் செய்யப்பட்டது. இவ்வாண்டில் இது 9 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதனால் இலங்கை உணவு ஏற்றுமதியாளர்கள் இவ்விடயத்தில் மிகவும் கவனம் செலுத்தி இலங்கை ஏற்றுமதியை அபிவருத்தி செய்ய வேண்டும் எனவும் அதற்காக  டுபாயில்  உள்ள இலங்கைத் தூதுவராலயம் உதவிகள் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி: Qahtan







Post a Comment

Previous Post Next Post