(TM) பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் ஹலாலுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
"இந்த சிங்கள நாடு எங்களுடையது", "இது விழித்தெழுவதற்கான காலம்", "ஹலாலை புறக்கணிப்போம்", "ஹலால் எங்களுக்கு ஹராம்" போன்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் இருக்கின்றன.
அந்த சுவரொட்டிகளை "பேருவளை சிங்களவர்கள் நாம்" உரிமை கோரியுள்ளது இந்த சுவரொட்டிகள் நேற்று சனிக்கிழமை இரவிலிருந்தே ஒட்டப்பட்டுள்ளன.
அளுத்கமை பகுதியிலுள்ள மாடுகள் அறுக்கும் இடத்திற்கு நேற்று சனிக்கிழமை பொது பல சேன அமைப்பினர் இரண்டு பஸ்களில் வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் விஜயம் செய்து, இது சட்டரீதியானது என பொது பல சேனா அமைப்பிடம் தெரிவித்துள்ளதுடன் அனுமதி வழங்கப்பட்ட பத்திரங்களை காண்பித்துள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இடத்திலிருந்து பொது பல சேன குழுவும் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
