முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை


இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பிரசாரங்களை உடனடியாக கட்டுகப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பல முக்கிய புத்திஜீவிகளை உள்ளடக்கிய வெள்ளி அரங்கத்தினாலேயே இந்த கோரிக்கை, கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகளை ஜனாதிபதியின் செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவர், கோட்டபேய ராஜபக்க்ஷ, பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரசாரங்கள் வலுப்பெற்றதன் காரணத்தினால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட வருகின்றன. சுவரொட்டிகள் மேதரும் பல்வேறு வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன, இது குறித்து நீங்களும் அறிந்திரிப்பீர்கள். எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post