திஹாரிய பள்ளிவாசல் சம்மேளனம் வெகு விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.


அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்திக் குழு, பாடசாலை பௌதீக வள அபிவிருத்திக் குழு  உறுப்பினர்களுகிடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24-12-2011) இஷாத் தொழுகைக்குப் பின் மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தின் போது ஒரு சில வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட திஹாரிய பள்ளிவாசல் சம்மேளனத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்னும் சில தினங்களில் திஹாரிய பள்ளிவாசல் சம்மேளனம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரில் உள்ள அனைத்தது பள்ளிவாசல்களிளிருந்தும் 3 பேர் வீதம் இச் சம்மேளனத்திற்கு தெரிவுசெய்யப்படுவார்கள். சமேளன உறுப்பினர்கள் அடுத்த கூட்டத்தின் போது தெரிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

சம்மேளனம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாடசாலைக்கும் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான நிகழ்வுகள், ஊரில் ஏற்படும் பிரச்சினைகள் உட்பட பல முக்கிய விடயங்களில் இச்சம்மேலனம் முக்கிய பங்கை வகிக்கும் .

Post a Comment

Previous Post Next Post