மர்ஹும் அப்துல் சத்தார், மர்ஹும் நூர் முஹம்மத் ஆகியோரின் பெயரில் அவர்களது அன்பு மகன் அல்-ஹாஜ் அப்துல் சத்தார் முஹம்மட் ஹனீப் அவர்களின் அன்பளிப்பில் ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசல் காணியில் கட்டிக்கொடுக்கப்பட்ட மகளிர் மகப்பேற்று சிகிச்சை நிலையம் இன்று வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.
மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் அல்-ஹாஜ் புவாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக பெற்றோலிய வள பிரதி அமைச்சர் கெளரவ சரண குணவர்த்தன அவர்களும், சிறப்பு அதிதிகளாக அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் கெளரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, மேல்மாகாண சபை உறுப்பினர் கெளரவ ரஞ்சித் ரூபசின்ஹ, தொழிலதிபர் அல்-ஹாஜ் உவைஸ், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் குஜி ஹனீபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் திஹாரிய மகளிர் மகப்பேற்று சிகிச்சை நிலையத்துக்காக நியமிக்கப்பட்ட அரச மருத்துவர்கள், தாதிமார்கள், ஊர்பிரமுகர்கள், திஹாரி வாழ் சதோதர இனத்தவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். மஸ்ஜிதுர் ரவ்ழா அஹதிய்யா மாணவர்கள் மற்றும் அல் இல்மா பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்சிகளுடன் இடம்பெற்ற இன் நிகழ்ச்சியில் பெரும்பாலான முஸ்லிம் தாய்மார்கள் கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
திஹாரிய செய்திகள்







