ரஞ்சித் ரூபசிங்க மஸ்ஜிதுர் ரவ்ழா அஹதிய்யாவுக்கு திடீர் விஜயம்.


இன்று காலை ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசல் காணியில் கட்டிக்கொடுக்கப்பட்ட மகளிர் மகப்பேற்று சிகிச்சை நிலையத் திறப்பு விழாவிற்கு வருகைதந்த மேல்மாகாண சபை உறுப்பினர் கெளரவ ரஞ்சித் ரூபசிங்க மஸ்ஜிதுர் ரவ்ழா அஹதிய்யா பாடசாலையைச் சென்று பார்வையிட்டார். 


பல நிகழ்வுகளில் பங்குபற்றி இருத்தாலும் ஒரு முஸ்லிம்  அஹதிய்யாவுக்கு சமூகம் தந்து இதுவே முதல் தடவை என்றும். இதனால் தான் அளவற்ற மகிழ்ச்சியடைவதாகவும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டிருந்தார். அஹதிய்யாவில் மூன்றாவது தவணை பரீட்சை நடைபெற்றுகொண்டிருந்த காரணத்தினால் அவர் அங்கு சில நிமிடங்களே உரையாற்றினார். இதன் போது அஹதிய்யா நிருவாகத்தினர்   அஹதிய்யாவுக்காக ஒரு போட்டோ கோப்பி இயந்தரம் ஒன்றை பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அவர் வெகு விரைவில் தான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். 



Post a Comment

Previous Post Next Post