முன்மாதிரிச் சம்பவம்: படல்கும்பறை நகரில் சிகரட் விற்பனை முற்றாக நிறுத்தம்.


நகர் வர்த்தக நிலையத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே முன்வந்து சிகரட் விற்பனை செய்வதை முற்றாக நிருத்திகொண்டுள்ள முன்மாதிரி சம்பவமொன்று, படல்கும்பறை நகரில் இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு 1 ஆம் திகதியுடன் மேற்படி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. படல்கும்பறை பொது சுகாதார சேவைப் பணிப்பாளர் சந்திக்க ரணகலவின் ஏற்பாட்டின் பேரில், மேற்படி பணிப்பாளரின்  பணியகத்தில் 31 ஆம் திகதி நகர வர்த்தகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக் கூட்டத்தின்போது,  சிகரட் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து சுகாதார சேவைப் பணிப்பாளரினால் தெளிவு படுத்தப்பட்டது. இதையடுத்து படல்கும்பறை நகர வர்த்தகர்கள் அனைவரும், முதலாம் திகதி தொடக்கம் சிகரட் விற்பனை செய்வதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

அத்துடன் "உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளோம்" என தமிழ், சிங்கள மொழிகளிலான அறிவிப்புப் பலகைகளும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக காட்சிப்  படுத்தப்பட்டுள்ளது. 

படல்கும்பறை நகரில் 30 வர்த்தக நிலையங்கலேயுள்ளன. ஒரு நாளைக்கு ஏற்கனவே மூவாயிரம் சிகரட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பத்து கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதையும் படல்கும்பறை நகர வர்த்தகர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- தினகரன் 

Post a Comment

Previous Post Next Post